சமுத்திரகனி நடிக்கும் ‘தடயம்’.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சமுத்திரகனி நடிக்கும் ‘தடயம்’.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
சமுத்திரகனி நடிக்கும் ‘தடயம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுத்திரகனி நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான படங்கள் ‘இட்லி கடை’, ‘காந்தா’. இந்தப் படங்களை தொடர்ந்து சமுத்திரகனி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தடயம்’. இந்தப் படத்தை நவீன்குமார் பழனிவேல் இயக்குகிறார். அஜய் கிருஷ்ணா தயாரிக்கிறார். இப்படம் ஜீ5 ஓடிடியில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சமுத்திரகனி நடிப்பில் உருவான ‘வினோதய சித்தம்’ திரைப்படமும் ஜீ5 ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் இந்தப் படத்தை பவன்கல்யாணை வைத்து சமுத்திரகனி ப்ரோ என்ற பெயரில் இயக்கியிருந்தார்.