பல பெண்களுடன் கர்நாடகா டிஜிபி நெருக்கம்.. வெளியான ஆபாச வீடியோக்கள்

பல பெண்களுடன் கர்நாடகா டிஜிபி நெருக்கம்.. வெளியான ஆபாச வீடியோக்கள்
கர்நாடகா டிஜிபி ராமச்சந்திர ராவ் காவலர் சீருடையில் அலுவலத்தில் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகாவில் பூகம்பத்தை கிளப்பிய விவகாரத்தில் நடந்தது என்ன?
கர்நாடக சிவில் உரிமைகள் அமலாக்க பிரிவு டிஜிபியாக பணியாற்றி வருபவர் ராமச்சந்திர ராவ். பணி நேரத்தில் தனது அலுவலகத்தில் வைத்து பல பெண்களுடன் நெருக்கமாக கட்டி பிடித்து கொஞ்சலில் ஈடுபட்ட வீடியோக்கள் வெளியாகி நாடு முழுக்க சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  காவல்துறை உயரதிகாரி பொறுப்பில் இருக்கும் ராமச்சந்திர ராவ் இதுபோன்று வக்கிர செயலில் ஈடுபட்டது கண்டித்தக்கது என கர்நாடகா மட்டுமல்லாது பிற மாநிலத்தவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் காவல்துறை வட்டாரமே கொதிந்தெளுந்துள்ளது.
சீருடையில் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் டிஜிபி ராமச்சந்திர ராவ், பெண்களை கட்டி பிடித்து கொஞ்சும் எல்லைமீறலை, ஹிடன் கேமிரா வைத்து யாரோ மறைமுகமாக ரெக்கார்டு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உள்துறை அமைச்சரிடம் விளக்கமளிக்க முயன்றபோது, அவரை பார்க்க டிஜிபி ராமச்சந்திர ராவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குள்ளான இந்த வீடியோக்கள் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் பெலகாவி மண்டல ஐஜியாக பணியாற்றிய காலத்தில் எடுக்கப்பட்டவை என முதலில் தெரிவித்தார். ஆனால் பின்னர் அந்த கருத்தை மாற்றி, இது AI மூலம் உருவாக்கப்பட்டது என்றும், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இதுபோன்று செய்துள்ளதாகவும் டிஜிபி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆனால் அது உண்மையிலேயே AI வீடியோவா - இல்லை எல்லைமீறிய லீலை வீடியோவா? என விசாரணையின் முடிவிலேயே தெரியவரும். தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையான இவர், காவல்துறை பவரை பயன்படுத்தி மகளை வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க முயன்றதாகவும், சாட்சியங்களை அழிக்க முயன்றதாக கூறப்படும் நிலையில், அவ்வழக்கு விசாரணையின்போது கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். பல நாட்கள் விடுப்பில் இருந்தவர் பணிக்கு திரும்பிய நிலையில் தற்போது அவரின் சர்ச்சை வீடியோக்கள் வெளியாகி மீண்டும் பிரச்சினையில் சிக்கி உள்ளார்.
சர்ச்சை வீடியோ குறித்த விசாரணையின் முடிவில் குற்றம் உறுதியானால் டிஜிபி மீது கர்நாடக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பேர் போன டிஜிபி ராமச்சந்திர ராவ் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணையும் நீடித்து வருகிறது.