ஊர்வசியின் சகோதரர் நடிகர் கமல் ராய் காலமானார்
நடிகைகள் ஊர்வசி, கல்பனா, கலாரஞ்சனி ஆகியோரின் சகோதரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். ‘புதுசா படிக்கிறேன் பாட்டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல் ராய்.
தொடர்ந்து, மலையாளத்தில் வெளியான சயுஜ்யம், அந்தப்புரம், மஞ்சு, கிங்கினி, கல்யாண சவுகந்திகம், வச்சலம், ஷோபனம், தி கிங் மேக்கர், லீடர் உள்பட பல படங்களில் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மலையாள சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். சென்னையில் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெறுகிறது. அவர் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துஉள்ளனர்.