சிந்து, காந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சிந்து, காந்த் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் மனாமி சூயிசுடன் மோதினார். 53 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி காந்த், 22-ம்நிலை வீரரான ஜப்பானின் கோகி வத்தனாபேவுடன் மோதினார். ஒரு மணி நேரம் 12 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கிடாம்பி காந்த் 21-15, 21-23, 24-22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.