இங்கிலாந்து - இலங்கை அணிகள் இன்று மோதல்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.
2-வது ஒருநாள் போட்டி 24-ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி 27-ம் தேதியும் இதே மைதானத்தில் நடைபெறுகிறது. டி 20 தொடரின் ஆட்டங்கள் ஜனவரி 30, பிப்ரவரி 1, 3-ம் தேதிகளில் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன.