நடிகர் சல்​மான் கானுக்கு டெல்லி உயர் நீதி​மன்​றம் நோட்டீஸ்

நடிகர் சல்​மான் கானுக்கு டெல்லி உயர் நீதி​மன்​றம் நோட்டீஸ்

ஆளுமை உரிமை வழக்​கில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு டெல்லி உயர் நீதி​மன்​றம் நோட்டீஸ் அனுப்பி​யுள்​ளது. பிரபல பாலிவுட் நடிகர் சல்​மான் கான், கடந்த ஆண்டு டிசம்​பர் மாதம், ஆளுமை உரிமைக்​கோரி டெல்லி உயர்​நீ​தி​மன்​றத்​தில் மனு​தாக்​கல் செய்​திருந்​தார்.

விசா​ரித்த நீதி​மன்​றம், சல்​மான் கானின் அடை​யாளம், குரல் போன்​றவற்றை எந்த நபரோ, வலை​தளமோ, செயலியோ அல்லது மின் வணிக தளமோ பயன்​படுத்த இடைக்​காலத் தடை விதித்தது.

இந்​நிலை​யில், சீனாவைச் சேர்ந்த செயற்கை நுண்​ணறிவு நிறு​வனம் ஒன்று குரல் மாதிரி​களை உரு​வாக்​கு​வதை முதன்மை வணி​க​மாகச் செய்து வரு​கிறது. இந்​நிறு​வனம் சல்​மான் கானின் ஆளுமை உரிமை வழக்​கில் உயர்​நீ​தி​மன்​றம் வழங்​கிய இடைக்​கால தடையை நீக்​கக் கோரி டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​துள்​ளது. இதையடுத்து இந்த மனுவுக்கு 4 வாரங்​களில் பதில் அளிக்கும்படி, சல்​மான் கானுக்கு நோட்​டீஸ் அனுப்​பிய டெல்லி உயர் நீதி​மன்​றம்,வழக்கை பிப்​.27-ம் தேதிக்​குத்​ தள்​ளிவைத்​தது.