அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?
தொடர்ச்சியாக எகிறி கொண்டு வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டுமே 2 முறை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. காலை, மாலை என இரண்டு வேளையும் சேர்த்து ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்தது.
அந்த வகையில் நேற்று (ஜனவரி 21) மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.165 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 14,415க்கும், சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 115,320க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று (ஜனவரி 22) தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களிடையே சற்று ஆறுதலை அளித்துள்ளது. அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.215 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,200க்கும், சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,13,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11,850க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ. 94,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.340க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.3,40,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.