கோவையில் விரைவில் ஏழுமலையான் கோயில்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்

கோவையில் விரைவில் ஏழுமலையான் கோயில்: திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்

திருப்​ப​தி​யில் உள்ள தேவஸ்​தான அலு​வல​கத்​தில் நேற்று நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் தலை​மை​யில் உயர்​மட்ட தேவஸ்​தான அதி​காரி​களின் ஆலோ​சனை கூட்​டம் நடந்​தது.

இதில் அனில்​கு​மார் சிங்​கால் பேசி​ய​தாவது: ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு​வின் ஆலோ​சனை​யின்​படி, நாடு முழு​வதும் ஏழுமலை​யான் கோயில் கட்டப்படுகிறது. தமிழகத்தின் கோயம்புத்தூரில் ஏழு​மலை​யான் கோயில் கட்ட தமிழக அரசு நிலம் ஒதுக்கி உள்​ளது. இங்கு மிக விரை​வில் அதற்​கான பணி​கள் தொடங்​கப்​படும். இதே​போன்​று, அசாம் மாநிலம் குவாஹாட்டி, பிஹாரில் பாட்​னா, கர்​நாடக மாநிலம் பெல்​காம் உள்​ளிட்ட பகுதிகளி​லும் அந்​தந்த மாநில அரசுகள் நிலம் ஒதுக்கி உள்​ளன.

இனி, வரும் மார்ச் மாதம் முதல் 60 தேவஸ்​தான கோயில்​களில் மதி​யம் மற்​றும் இரவு என இரு வேளை​களி​லும் பக்​தர்​களுக்கு அன்​ன​தானம் வழங்​கப்​படும். இவ்​வாறு அனில்​கு​மார் சிங்​கால் கூறி​னார்.