சிரஞ்சீவி மகள் கதாபாத்திரத்தில் கீர்த்தி ஷெட்டி

சிரஞ்சீவி மகள் கதாபாத்திரத்தில் கீர்த்தி ஷெட்டி

நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். அனில் ரவிபுடி இயக்கிய இப்படம் வெற்றிபெற்றதை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, சிரஞ்சீவி அறிக்கை வெளியிட்டுஉள்ளார்.

இந்நிலையில் அவர் இயக்குநர் பாபியுடன் மீண்டும் இணைகிறார். இந்தப் படம் அப்பா, மகள் உறவை பற்றிய படம் என்று கூறப்படுகிறது. இருவரும் இதற்கு முன் ‘வால்டர் வீரய்யா’ படத்தில் பணியாற்றி இருந்தனர்.

இதில் சிரஞ்சீவியின் மகளாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தை கேவிஎன் புரொடக் ஷன்ஸ் தயாரிக்கிறது. நடிகை கீர்த்தி ஷெட்டி தமிழில் கார்த்தி ஜோடியாக நடித்துள்ள வா வாத்தியார் பொங்கலுக்கு வெளியாகியுள்ளது. அடுத்து பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ரவி மோகன் ஜோடியாக ‘ஜீனி’படங்களில் நடித்துள்ளார்.