நடிகர் தனுசுக்கு அடுத்த மாதம் 2வது திருமணம்?

நடிகர் தனுசுக்கு அடுத்த மாதம் 2வது திருமணம்?

நடிகர் தனுசும், இந்தி நடிகை மிருணாள் தாகூரும் அடுத்த மாதம் 14-ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை முதலாவது திருமணம் செய்து, தனுசுக்கும் அவருக்கும் 2 மகன்கள் உள்ளனர். எனினும் 2 பேரும் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து படங்களில் ஆர்வம் காட்டி வந்த தனுஸ், இந்தி பட சூட்டிங்கிற்காக மும்பை சென்றபோது மிருணாள் தாகூருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில் காதலர் தினமான பிப்ரவரி மாதம் 14-ம் தேதி மும்பையில் வைத்து திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தகவலை தனுசோ, மிருணாள் தாகூரோ உறுதி செய்யவில்லை. அதேநேரத்தில் அந்தத் தகவலை 2 பேர் தரப்பும் இதுவரை மறுக்கவும் இல்லை.