கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்த மாட்டோம்: ட்ரம்ப்

கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்த மாட்டோம்: ட்ரம்ப்

சு​விட்​சர்​லாந்​தின் டாவோஸ் நகரில் நடை​பெற்று வரும் உலகப் பொருளா​தார மன்ற மாநாட்டு கூட்​டத்​தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்​கிழமை உரை​யாற்​றி​னார். அப்​போது, கிரீன்​லாந்து தீவை அமெரிக்கா​வுடன் இணைத்துக் கொள்ள எவ்​வித ராணுவ பலத்​தை​யும் பயன்​படுத்​தப் போவதில்லை என்று அவர் உறு​திபடத் தெரி​வித்​தார்.

இதுகுறித்து அவர் பேசி​ய​தாவது: அமெரிக்​கப் பொருளா​தா​ரம் அபரிமித​மான வளர்ச்​சியை எட்​டி​யுள்ள நிலை​யில், ஐரோப்​பிய நாடு​கள் சரி​யான திசை​யில் பயணிக்​க​வில்​லை. கிரீன்​லாந்தை நிர்​வகிப்​ப​தற்​கும், அதனை பாது​காப்​ப​தற்​கும் அமெரிக்​கா​வால் மட்​டுமே முடி​யும். உலகப் பாது​காப்​பிற்​காக எங்​களுக்கு கிரீன்​லாந்து என்ற அந்​தப் பனிப்​பாறைத் தீவு தேவைப்​படு​கிறது, நீங்​கள் அதனை தர சம்​ம​தித்​தால் அதற்கு நாங்​கள் நன்​றி​யுள்​ளவர்​களாக இருப்​போம். மறுத்​தால் அதனை நாங்​கள் நினை​வில் கொள்​வோம். இந்த விவ​காரத்​தில் நேட்​டோ நாடு​கள் நியாயமற்ற வகை​யில் நடந்​து​கொள்​கின்​றன.

டென்​மார்க்​கிட​மிருந்து கிரீன்​லாந்தை வாங்​கு​வது குறித்து உடனடிப் பேச்​சு​வார்த்தை நடத்​தப்பட உள்​ளது. இரண்​டாம் உலகப் போரின்​போது ஆர்க்​டிக் தீவு​களுக்கு அமெரிக்கா அளித்த பாது​காப்பை மறந்​து​விட்​டு, டென்​மார்க் நன்​றி​யுணர்​வின்றி நடந்து கொள்​கிறது. உண்​மை​யில் இந்த மிகப்​பெரிய பாது​காப்​பற்ற தீவு வட அமெரிக்​கா​வின் ஒரு பகு​தி​யாகும். அது எங்​கள் பிராந்​தி​யம்.

அங்​குள்ள கனிம வளங்​களை வெட்​டி​யெடுப்​ப​தில் பல்​வேறு சிரமங்​கள் உள்​ளன. நூற்​றுக்​கணக்​கான அடி ஆழப் பனியைத் தோண்ட வேண்​டி​யுள்​ளது. ஆனால் அந்த வளங்​களுக்​காக மட்​டும் நாங்​கள் அதைக் கேட்​க​வில்​லை; தேசிய பாது​காப்​பிற்​காக அது தேவைப்​படு​கிறது. கிரீன்​லாந்தை கைப்​பற்ற ராணுவ பலத்தை பிரயோகிக்​கும் எண்​ணமில்​லை. டென்​மார்க்​கிடம் பேச்​சு​வார்த்தை மூல​மாகவே சுமூக முடிவை எட்ட விரும்​பு​கிறோம். இவ்​வாறு ட்ரம்ப் பேசி​னார்.