இன்றைய ராசிபலன் 21 ஜனவரி 2026
மேஷம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். உறவினருடன் இருந்த கருத்துவேறுபாடு விலகும். அலுவலகரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். மேலதிகாரியின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் தேங்கிய சரக்கு விற்றுத் தீரும்.
ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர். பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். செலவுகளைக் குறைத்து சேமிப்பீர்கள். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
மிதுனம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர். தாயாரின் உடல்நலம் சீராகும். குடும்பத்தினருடன் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரரீதியான பயணத்தால் பயனடைவீர். அலுவலகத்தில் மதிப்புயரும்.
கடகம்: முன்கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் புரிதல் இல்லாமல் குழப்பம் வரும். அலுவலகத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். பங்குதாரர்களை அலட்சியப்படுத்தாதீர்கள்.
கன்னி: தம்பதிக்குள் நெருக்கம் கூடும். அரைகுறையாக நின்ற வீட்டு கட்டுமானப் பணிகள் முடியும். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர். வாகனத்தை சீரமைப்பீர். பூர்வீக சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். நண்பர்கள் தேடி வருவர். வீடு, மனை விற்பது வாங்குவது லாபம் தரும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
விருச்சிகம்: நல்லவர்கள் நட்பு கிடைக்கும். புது தெம்பு பிறக்கும். எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிட்டும். பிள்ளைகள் விளையாட்டுத் தனத்தை விட்டுவிட்டு பொறுப்புடன் நடந்து கொள்வர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.
தனுசு: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வேற்று மொழி பேசுபவர்களால் நல்லது நடக்கும். செலவுகள் குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
மகரம்: குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். மனைவி, பிள்ளைகளின் விருப்பங்களைக் கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
கும்பம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். மகளின் திருமண செலவுகளை சமாளிக்கும் திறன் கூடும். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: சின்னச் சின்ன சந்தர்ப்பங்களை பயன்படுத்தி காரியம் சாதிப்பீர். பெற்றோரின் ஒத்துழைப்பு கூடும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.