TASMAC கடைகள் அடைப்பு... வெளியானது முக்கிய அறிவிப்பு...
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வருகின்ற 26 ம் தேதி குடியரசு தினம் அன்று மதுக்கடைகள் மூடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 26-ந் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபானக் கூடங்கள், ஓட்டலில் உள்ள பார்கள் மற்றும் அனைத்து உரிம கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்று மது விற்பனை ஏதும் நடைபெறாது என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
அதாவது டாஸ்மாக் கடைகளுக்கு திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி என 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த நாளில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
அந்த வகையில் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை கடைகள் , விதி 12-இல் தெரிவிக்கப்பட்ட அறிவிப்பு படி 26.01.2026 (திங்கட்கிழமை) குடியரசு தினத்தன்று டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து கடைகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.