19 ஜனவரி 2026 இன்றைய ராசிபலன்கள்
மேஷம்: வெகுநாட்களாக மனதை வாட்டிய பிரச்சினைக்கு முடிவு கட்டுவீர்கள். வாகனச் செலவு நீங்கும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபங்கள் நீங்கி, அன்யோன்யம் பிறக்கும். விலகிச் சென்றவர்கள் உங்களைப் புரிந்துகொண்டு வருவார்கள். பல வகையிலும் பொருட்கள் சேரும்.
ரிஷபம்: எதார்த்தமாகப் பேசி அனைவரையும் கவருவீர்கள். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பும். மனைவி வழியில் ஆதாயம். அனுகூலம் உண்டு. தடைபட்ட காரியங்கள் விரைந்து முடியும். தங்களது முடிவில் பிடிவாதமாக இருக்கும் பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள்.
கடகம்: எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆறுதலாக இருப்பார்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். அரசு, வங்கி வகையில் ஆதாயம் உண்டு. வீடு, கடையை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பேச்சில் நிதானம் அவசியம்.
கன்னி: உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சர்வசாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் ஆதாயம் உண்டாகும். கடனுதவி கிடைக்கும்.
விருச்சிகம்: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுக் காரியங்களில் வெற்றி உண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய கடன் பிரச்சினைகள் தீரும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சகோதர வகையில் ஆதாயம், அனுகூலம் உண்டாகும்.
தனுசு: கடந்தகால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். பயணத்தால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
மீனம்: விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் உரிய நேரத்தில் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உங்களைக் குறைகூறியவர்கள் இனி பாராட்டுவார்கள். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.