விபத்தில் சிக்கியவர்களை பிரபல நடிகர் அக்சய் குமார் மீட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்சய் கன்னா. இவர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்திருப்பார். இவர் தனது அவரது மனைவி ட்விங்கிள் கண்ணாவுடன் 25-வது திருமண நாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு, வெளிநாட்டிலிருந்து நேற்று மாலை மும்பை திரும்பினர்.
விமான நிலையத்திலிருந்து ஜுஹுவில் உள்ள தங்களது இல்லத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, ஜுஹு 'சில்வர் பீச் கஃபே' அருகே எதிர்பாராத விதமாக ஒன்றன் பின் ஒரு வாகனங்களாக மோதி தொடர் விபத்து நிகழ்ந்தது.
அதிவேகமாக வந்த மெர்சிடிஸ் கார் ஒன்று அங்கிருந்த ஆட்டோ ரிக்ஷா மீது மோதியது. அந்த மோதலின் வேகத்தில் ஆட்டோ நிலைதடுமாறி அக்ஷய் குமாரின் பாதுகாப்பு வாகனத்தின் மீது மோதியதுடன், பாதுகாப்பு வாகனம் அக்ஷய் குமார் பயணித்த சொகுசு காரின் மீதும் மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ ரிக்ஷா பலத்த சேதமடைந்து, அதன் ஓட்டுநரும் பயணியும் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். விபத்து நடந்த அடுத்த கணமே, அக்ஷய் குமார் தனது காரில் இருந்து கீழே இறங்கி, தனது பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டார்.
நசுங்கிய ஆட்டோவைத் தூக்கி நிறுத்தி, உள்ளே சிக்கியிருந்தவர்களைப் பத்திரமாக வெளியே மீட்டார். அதிர்ஷ்டவசமாக அக்ஷய் குமார் மற்றும் ட்விங்கிள் கண்ணா ஆகியோருக்குக் காயம் ஏதும் ஏற்படவில்லை.
உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டாலும், காயமடைந்தவர்களுக்குத் தேவையான முதலுதவிகளைச் செய்ய அக்ஷய் குமார் நேரில் களமிறங்கியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.