ஹரியானாவில் தாக்கப்பட்ட வலு தூக்குதல் வீரர் தன்கர் உயிரிழப்பு
ஹரியானா மாநிலம் ரோத்தக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோஹித் தன்கர் (28). தேசிய அளவிலான பாரா வலு தூக்குதல் வீரரான இவர், கடந்த 27-ல் ரிவாரி நகரில் உள்ள தனது உறவினர் ஒருவரின் இல்லத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றார்.
அங்கு மணமகன் உறவினர்களின் தவறான நடத்தையை ரோஹித் கண்டித்துள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் காரில் தனது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த ரோஹித்தை இடைமறித்த ஒரு கும்பல், ஹாக்கி கம்பு, இரும்பு கம்பி உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் படுகாயமடைந்த ரோஹித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்களுக்குப் பிறகு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.