ரயில்வேயில் வேலை... இன்னும் 4 நாள்களே அவகாசம்
இந்திய ரயில்வே-யில் 5,800 காலியிடங்கள் கொண்ட தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் 4 நாள்களே (27-ம் தேதி வரை) அவகாசம் உள்ளது.
இந்திய ரயில்வே-யில் தொழில்நுட்பம் சாராத பணிகளை நிரப்புவதற்கு கடந்த மாதம் 21 ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. அதன்படி, முதன்மை டிக்கெட் பரிசோதகர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் கண்காணிப்பாளர், போக்குவரத்து கட்டுப்பாட்டு உதவியாளர், இளநிலை மற்றும் முதுநிலை எழுத்தர்கள் உள்ளிட்ட பணிகளில் 5,800 இடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள், நவம்பர் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் வரும் 27 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.
அந்த அவகாசம் இன்னும் 4 நாள்களில் முடிவடைய உள்ளது. ஆதலால் வேலைக்கு விண்ணபிக்காதோர் உடனடியாக விண்ணப்பிங்க.