பீகார் சட்டமன்ற தேர்தல் எப்போது? இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு!

பீகார் சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீகார் சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அந்த மாநில சட்டமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடத்தும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கி உள்ளது.
இந்த நிலையில், பீகார் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 4 மணியளவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.