நெற்குன்றத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்... 10,000 பேருக்கு பட்டுப்புடவை வழங்கிய பஞ்சாயத்து துணை தலைவி

நெற்குன்றத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்... 10,000 பேருக்கு பட்டுப்புடவை வழங்கிய பஞ்சாயத்து துணை தலைவி
நெற்குன்றத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்... 10,000 பேருக்கு பட்டுப்புடவை வழங்கிய பஞ்சாயத்து துணை தலைவி

செங்கல்பட்டு மாவட்டம், நெடுங்குன்றம் ஊராட்சியில் "நம்ம ஊரு சமத்துவ பொங்கல் விழாவை" முன்னிட்டு பத்தாயிரம்  குடும்பத்தினருக்கு பட்டு புடவையை ஊராட்சி மன்ற துணை தலைவர் சூ.விஜயலட்சுமி சூர்யா வழங்கினார்.


வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில், "நம்ம ஊரு சமத்துவ பொங்கல் விழா" நெடுங்குன்றம் கிராமத்தில் நடைபெற்றது. இதில் நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சூ.விஜயலட்சுமி சூர்யா, இவரது கணவரும், சமூக சேவகரும், ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பின் நிறுவன தலைவரும், பாஜக பட்டியல் அணி மாநில செயலாளருமான இரா.கு.சூர்யா ஆகியோரின் ஏற்பாட்டின் பேரில் பரதநாட்டியம், உழவர்களுக்கு மரியாதை செலுத்துதல் , திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கோணிப்பை போட்டி, பலூன் ஊதி உடைத்தல் போட்டி, நீர் நிரப்புதல், இசை நாற்காலி, ஜோடி போட்டி, சமத்துவ பொங்கல் போட்டி, கட்டிய பலூனை பத்திரமாக பாதுகாத்தல் போட்டி, செங்கல் வைத்து மனைவியை சேகரித்தல் போட்டி, 1 வயது முதல் 5 வயது வரையிலான மழலை குழந்தைகளுக்கு மாறுவேட போட்டி, தாத்தா பாட்டிகளுக்கு கிராமிய பாட்டு போட்டி, கயிறு இழுத்தல் போட்டி, பலூன் ஊதி கப்பு சேகரித்தல் போட்டி, கோலம் போட்டி, இளவட்ட கல் தூக்குதல் போட்டி, , உரியடித்தல் போட்டி, பேப்பர் கப்பு அடுக்குதல் போட்டி, சிலம்பம் சுற்றுதல் , மான் கொம்பு சுற்றுதல் , சுருள் வாள்,  உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பின் மாநில செயலாளர் சுதாகர், மாநில மகளிர் அணி பொறுப்பாளர் இராசாத்தி, சமூக செயற்பாட்டாளர் ஃபயர் சதீஷ், படூர் புருஷோத்தமன், கேளம்பாக்கம் சாமுவேல், பேராசிரியர் கார்த்திக்ராஜி ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகள் உட்பட வெற்றி பெற்ற 300க்கும் மேற்பட்டோருக்கு அண்டா, தவலை உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கினர்.

அதுமட்டுமில்லாமல் நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட நெடுங்குன்றம், ஆலப்பாக்கம், சதானந்தபுரம், கொளப்பாக்கம், மப்பேடுபுத்தூர், கலைஞர்நகர், அண்ணா நகர் உள்ளிட்ட  கிராமங்களை சேர்ந்த 10,000  பட்டு புடவை  ஒவ்வெரு குடும்பத்தினருக்கும்  பட்டுப்புடவை மற்றும் காலண்டர் ஆகியவற்றை நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சூ.விஜயலட்சுமி சூர்யா, இவரது கணவரும், சமூக சேவகரும், ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பின் நிறுவன தலைவரும், பாஜக பட்டியல் அணி மாநில செயலாளருமான இரா.கு.சூர்யா ஆகியோர் வழங்கினர். மேலும் இந்த நிகழ்ச்சியை தமிழ்த்துறைத் தலைவர் ஆசிரியர் ச.கமலகண்ணன் தொகுத்து வழங்கினார்.