மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னம்!
2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
முன்னதாக கடந்த 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அக்கட்சி இதே சின்னத்தில்தான் போட்டியிட்டது.
2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி 2019 மக்களவை மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டது. அதனை தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி அமைத்தார். ஆனால், அந்த தேர்தலும் மநீமவுக்கு தொகுதிகள் வழங்கப்படவில்லை.
இருப்பினும், திமுக கூட்டணி சார்பாக கடந்த ஆண்டு கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் மநீம, திமுக கூட்டணியிலேயே தொடர்கிறது. இந்த சூழலில்தான் அக்கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. டார்ச் லைட் மக்கள் மத்தியில் ஏற்கனவே பரிச்சயமான சின்னம் என்பதால், இது அக்கட்சிக்கு சாதகமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.