பாகிஸ்தான் பேட்டர்கள் சொதப்பல் - இந்தியா அபார வெற்றி!

பாகிஸ்தான் பேட்டர்கள் சொதப்பல் - இந்தியா அபார வெற்றி!

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஐசிசி மகளிர் உலகக்கோப்பை போட்டி தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் நேற்று நடைபெற்ற 6வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் பகலிரவாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஃபாத்திமா சனா, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 247 ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக ஹர்லின் டியோல் 65 பந்துகளில் 46 ரன்களை எடுத்தார். அணியின் பிற வீராங்கனைகள் சொல்லிக்கொள்ளும்படியாக ரன்களை சேர்க்கவில்லை என்றாலும், ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் களமிறங்கிய ரிச்சா கோஷ் வெறும் 20 பந்துகளில் 35 ரன்களை விளாசியதுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் தரப்பில் டயானா பேய்க் 10 ஓவர்களில் 69 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.