தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: பிரசாந்த் கிஷோர்
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி அடைந்தது.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு முதல்முறையாக பிரசாந்த் கிஷோர் நேற்று பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நாங்கள் ஒரு நேர்மையான முயற்சி மேற்கொண்டோம். ஆனால் அது முற்றிலும் தோல்வி அடைந்தது. இதை ஒப்புக்கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. இதற்கு நானே 100% பொறுப்பேற்கிறேன். எனினும் பிஹாரை மேம்படுத்த வேண்டும் என்ற எனது உறுதியில் இருந்து பின்வாங்க மாட்டேன். இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.