ஓடிடியில் நவ.21-ல் வெளியாகிறது ‘பைசன்’
ஓடிடி தளத்தில் நவம்பர் 21-ம் தேதி ‘பைசன்’ வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்ட படம் ‘பைசன்’. ‘டியூட்’ படத்துடன் வெளியானாலும், நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது உலகளவில் ரூ.80 கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளது. இதனிடையே இப்படம் நவம்பர் 21-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளம் உறுதிப்படுத்தி இருக்கிறது. நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த படம் ‘பைசன்’. இதன் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிட்டார் ஃபைவ் ஸ்டார் செந்தில். அவருக்கு லாபகரமான படமாகவே அமைந்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், லால், அமீர், பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ராஜிஷாவிஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பைசன்’. பிரபல கபடி வீரர் மானத்தி கணேசன் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.