ஜூனியர் என்டிஆரின் ‘டிராகன்’ படத்தில் அனில் கபூர்!

ஜூனியர் என்டிஆரின் ‘டிராகன்’ படத்தில் அனில் கபூர்!

‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ படங்களின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் ‘டிராகன்’ படத்தில் நடித்து வருகிறார், ஜூனியர் என்டிஆர். அவர் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் உள்பட பலர் நடிக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். ‘வார் 2’ படத்துக்குப் பிறகு ஜுனியர் என் டி ஆருடன் அனில் கபூர் மீண்டும் இணைந்துள்ளார். இந்தப் படம் ஜூன் 25-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.