தனுஷுக்கு நாயகியாகும் பூஜா ஹெக்டே?
தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.
’போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் மமிதா பைஜு நாயகியாக நடித்து வருகிறார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இப்படத்தினை முடித்துவிட்டு கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ்.
இப்படத்தினை ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக பூஜா ஹெக்டே, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இன்னும் ஒப்பந்தமாக கையெழுத்தாகவில்லை.