சமூக வலைதள பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் சீமான்!

சமூக வலைதள பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காணொலி படைப்புகள் மூலம் சமூக வலைதளங்களில் தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகிறார்.

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் நாதக வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு’ திருச்சியில் பிப்.21-ம் தேதி நடைபெறுகிறது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடத்தப்படும் இந்த மாநாட்டை, மக்களிடம் கொண்டு சேர்க்கும் முன்னெடுப்பாக கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதிகப்படியான மக்களை கவரும் வகையில் மிகச்சிறந்த காணொலிகளை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு சீமான் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கி கவுரவிக்க உள்ளார். இத்துடன், தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவளிக்கும் ஊடகங்களிலும் இவற்றை வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பானது, தேர்தல் களத்தில் நாதக-வின் கருத்துகளை டிஜிட்டல் தளங்களில் வலிமையாகக் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு முக்கிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது.