தம்பிக்கு கல்யாணமாம் !சத்தமே இல்லாமல் திருமணத்தை நடத்திய டிடி.. இணையத்தில் குவியும் வாழ்த்து!

தம்பிக்கு கல்யாணமாம் !சத்தமே இல்லாமல் திருமணத்தை  நடத்திய டிடி.. இணையத்தில் குவியும் வாழ்த்து!

 அனைவருக்கும் பிடித்தமான தொகுப்பாளினிகளில் ஒருவராக இருக்கிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. டிடி தனது வீட்டில் விசேஷம் நடந்துள்ள மகிழ்ச்சியாக தகவலை போட்டோவுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக மாறிய டிடி, அதே தொலைக்காட்சியில் பாட்டு போட்டி, கேம் ஷோ என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் மிக முக்கியமான நடிகர் மற்றும் நடிகைகளை மட்டுமே போட்டி எடுத்து வருகிறார். குறிப்பாக நடிகை நயன்தாராவிற்கு மிகவும் பிடித்தமான தொகுப்பாளி டிடி தான்.

டிடி வீட்டில் விசேஷம்: இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷி தனது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது விதவிதமான போட்டோக்களை பகிர்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். தற்போது இவர், இன்ஸ்டாகிராமில் தனது சகோதரின் திருமண போட்டோவை பகிர்ந்துள்ளார். டிடியின் சகோதரர் தர்ஷன், கிர்கிஸ்தானை சேர்ந்த அஜர் என்ற பெண்ணை திருமணம் செய்திருக்கிறார்

சகோதரரின் திருமணத்தில் டிடியின் அக்கா, பிரியதர்ஷினி அவரின் கணவர், மகன் முன்னின்று திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்கள். இந்த போட்டோவை அவர் திவ்யதர்ஷினி இணையத்தில் பகிர்ந்து, எங்கள் தம்பி இன்று காலை திருமணம் செய்து கொண்டார். தர்ஷனுக்கும் அஜாருக்கும் உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுங்கள். எங்கள் அழகான அஜாரேவரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,

மேலும் உங்கள் அழகான குடும்பத்தை கிர்கிஸ்தானிலிருந்து எங்கள் குடும்பத்தில் அரவணைக்கிறோம் என பதிவிட்டுள்ளார். பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.