‘காஞ்சனா 4’ படத்தில் பூஜா ஹெக்டே, நோரா பதேஹி!
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘முனி’ திரைப்படம், கடந்த 2007-ம் ஆண்டு வெளியானது. இப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, இதன் அடுத்த பாகங்களாக ‘காஞ்சனா’, ‘காஞ்சனா 2’, ‘காஞ்சனா 3’ படங்கள் உருவாக்கப்பட்டன. இதை இயக்கி நடித்தார் ராகவா லாரன்ஸ். இந்தப் படங்களும் வரவேற்பைப் பெற்றன.
இப்போது ‘காஞ்சனா 4’ படத்தை இயக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். முந்தைய பாகங்களைப் போல ஹாரர் காமெடி படமாக இது உருவாகி வருகிறது.
இதில் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் இந்தி நடிகை நோரா பதேஹி நாயகிகளாக இணைந்துள்ளனர். இதை சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதை சன் பிக்சர்ஸ், கோல்டுமைன் நிறுவனங்களுடன் இணைந்து ராகவா லாரன்ஸின், ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.