விஜய் தலைமையில் ஜன.25-ல் தவெக செயல்வீரர்கள் கூட்டம்: ஆனந்த் அறிவிப்பு

விஜய் தலைமையில் ஜன.25-ல் தவெக செயல்வீரர்கள் கூட்டம்: ஆனந்த் அறிவிப்பு

விஜய் தலைமையில் வரும் 25 ஆம் தேதி தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த தனது எக்ஸ் தளத்தில், “வரும் 25--ம் தேதி ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.