தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளையுடன் நிறைவு

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளையுடன் நிறைவு
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகள் நாளையுடன் நிறைவடைகின்றன.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள் உள்பட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தப்பட்டது. கணக்கீட்டு படிவங்கள் பெறும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் என சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
இந்நிலையில் இதுவரை ஒட்டுமொத்தமாக 12 லட்சத்து 80 ஆயிரத்து 110 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகள் நாளையுடன் நிறைவடைய உள்ளது.