விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்... நாளை நேரில் ஆஜராகிறார்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜராகும்படி தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
இதையடுத்து டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை அவர் நேரில் ஆஜராவார் எனக் கூறப்படுகிறது.
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தவெக கூட்டத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.
ஏற்கெனவே விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 12-ம் தேதி விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் சென்னைக்கு திரும்பினார். இதைத் தொடர்ந்து, விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் மீண்டும் 2வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர்.