கவினின் புதிய படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்

கவினின் புதிய படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்

கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கென் ராய்சன் இயக்கத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கும் 9-வது திரைப்படம் உருவாகி வருகிறது. இசையமைப்பாளர் ஓஃப்ரோ (OFRO) இசையில், ஃபேண்டஸி - ரொமான்டிக் - காமெடி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகரும், நடன இயக்குநருமான சாண்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், படக்குழு அட்டகாசமான போஸ்டர் மற்றும் அறிவிப்பு வீடியோவை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கவினும், சாண்டி மாஸ்டரும் மாடர்ன் கெட்டப்பில், வாயில் வெடியை வைத்தபடி “Boys Are Back” என அறிவிக்கும் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து, அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக, கலகலப்பான ஒரு ஆபிஸ் சூழலில் அனைத்தும் கலைந்து கிடக்கும் நிலையில், கேமரா மெதுவாக சுழன்று பின்னே நாற்காலியில் அமர்ந்த நிலையில் பிரியங்கா மோகன் அறிமுகமாக, இறுதியாக போஸ்டரில் காணப்பட்ட அதே லுக்கில் கவின் - சாண்டி மாஸ்டர் கூட்டணியுடன் வீடியோ நிறைவடைகிறது.

‎இந்த அசத்தலான அறிவிப்பு வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அந்த வீடியோவில் ஒரு அலுவலக சூழலில் கதாநாயகி பிரியங்கா மோகன் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலவும், உடன் பணியாற்ற கூடிய ஊழியர்கள் அனைவரும் பயந்து ஓடுவது போலவும், இறுதியாக யாரைப் பார்த்து பயப்படுகிறீர்கள் என பார்க்கும் பொழுது கவின் சாண்டி இருவரையும் காட்டுகிறார்கள்.

இருவரது வாயிலும் சிகரெட் போல பட்டாசை வைத்து அந்த வீடியோ முடிகிறது. இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்து அலுவலகத்தில் பட்டாசு போல வெடித்து கலகல பூட்டுகிறார்கள் என்பதை சூசகமாக இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ மற்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமான கவின் - சாண்டி கூட்டணிக்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அவர்களுடைய இயல்பான நட்பு, கலகலப்பான உரையாடல்கள், ஜாலியான கெமிஸ்ட்ரி ஆகியவை ரசிகர்களை எப்போதுமே உற்சாகப்படுத்தி வந்தது. அந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ஒரே படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

ஏற்கனவே கவின் - பிரியங்கா மோகன் காம்போ ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது சாண்டி மாஸ்டரும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.