டென்மார்க், பிரிட்டன் மீது டிரம்ப் 10% வரி விதிப்பு

டென்மார்க், பிரிட்டன் மீது டிரம்ப் 10% வரி விதிப்பு

டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பொருள்கள் மீது 10 சதவீதம் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார்.

டென்மார்க்கிற்கு சொந்தமான கிரின்லாந்த் பகுதியில் எதிரி நாடுகளான ரஸ்ய, சீனா தலையீடு இருப்பதால், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார். ஆதலால் கிரின்லாந்தை படைபலத்தை பயன்படுத்தி, அமெரிக்காவுடன் இணைக்கப் போவதாகவும் டிரம்ப் கூறி வருகிறார்.

டிரம்பின் இந்தத் திட்டத்திற்கு டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேலைநாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து, அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்கள் மீது 10 சதவீதம் வரியை டிரம்ப் விதித்துள்ளார்.

இந்த வரி விதிப்பு, வருகிற பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருமென்றும் டிரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கெனவே ரஸ்ய, சீனா, இந்தியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது டிரம்ப் கூடுதல் வரி விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.