ஒரு ஓவரில் 13 பந்துகள் வீசிய இந்திய அணி வீரர்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் மோசமான சாதனை படைத்தார்.
ஒரு ஓவரில் 6 பந்துகள் மட்டுமே வீசப்படுவதுண்டு. ஆனால் மோசமாக பந்துவீசிய அர்ஸ்தீப் சிங், 6 பந்துகளுக்கு பதிலாக மொத்தம் 13 பந்துகளை வீசினார். இதில் 7 பந்துகள் வைடுகள் ஆகும். இதன்மூலம் அந்த அணிக்கு 7 ரன்கள் தனியாக கிடைத்தது.
இதையடுத்து வீசிய 6 பந்துகளில் ஒரு பந்து, சிக்சர் விளாசப்பட்டது. அண்மைகாலத்தில் ஒரு ஓவரில் அதிக பந்துகள் வீசிய முதல் வீரர் இவரே ஆவார்.
அந்த ஓவரில் தென்னாப்பிரிக்க அணிக்கு மொத்தம் 18 ரன்களை (7 வைடுகள் உள்பட) அர்ஸ்தீப் சிங் வாரி இறைத்தார்.