இயக்குனர்களின் கண்டிஷனுக்கு ஒப்புக் கொள்ளாத நடிகை.. பட வாய்ப்புகளை இழந்ததாக ஆதங்கம்
இயக்குனர்கள் போட்ட கண்டிஷன் காரணமாக தான் பட வாய்ப்புகளை இழந்ததாக முன்னணி நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறியிருப்பவர் டாப்ஸி. வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த தனுஷின் ஆடுகளம் படத்தில் இவரது நடிப்பு அதிகம் பேசப்பட்டது.
தற்போது இந்தி படங்களிலும், இணைய தொடர்களிலும் டாப்ஸி பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபதில் அளித்த அவரது பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் தனது சுருள் முடி Curling Hair பற்றி சுவாரசியமாக பேசியுள்ளார்.
சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் இயக்குனர்கள் தனது முடியை சுருள் போன்ற இல்லாமல் நேராக மாற்ற வேண்டும் என்று கண்டிஷன் போட்டதாக கூறியுள்ளார்.
ஆனால், இந்த கண்டிஷன் தனக்கு பிடிக்காததால் தனக்கான பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதாகவும் டாப்ஸி கிண்டலாக தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் தனது தலைமுடி காற்றில் பறக்கும் படியான ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, "என் சுருட்டை முடி என் கிரீடம் (My curls are my crown)" எனப் பதிவிட்டிருந்தார். இது அவரது ரசிகர்களிடையே, குறிப்பாகச் சுருட்டை முடி கொண்ட பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.