ம.பி.யில் சாலையில் நடனமாடியபடி சிக்னல் கொடுத்த தலைமை காவலர் பதவி இறக்கம்

ம.பி.யில் சாலையில் நடனமாடியபடி சிக்னல் கொடுத்த தலைமை காவலர் பதவி இறக்கம்

சாலையில் மைக்​கேல் ஜாக்​சன் போல் நடன​பாடி சிக்​னல் கொடுத்த மத்​திய பிரதேச போக்​கு​வரத்து தலை​மைக் காவலர், காவல​ராக பதவி​யிறக்​கம் செய்​யப்​பட்​டார்.

மத்​தி​யப் பிரதேசம் இந்​தூரில் பணி​யாற்​றும் போக்​கு​வரத்து தலை​மைக் காவலர் ரஞ்​சித் சிங். இவர் மைக்​கேல் ஜாக்​சன் போல் ‘மூன்​வாக்’ நடன​மாடி சிக்​னல் கொடுத்​தார். இந்த வீடியோ டி.வி மற்​றும் சமூக ஊடகங்​களில் வெளி​யாகி வைரலாக பரவியது. இது குறித்த மத்​தி​யப் பிரதேச காவல்​துறை விசா​ரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுத்​துள்​ளது.

தலை​மைக் காவல​ராக பணி​யாற்​றிய ரஞ்​சித் சிங்​கை, காவல​ராக பதவி​யிறக்​கம் செய்து கூடு​தல் துணை ஆணை​யர் ராஜேஸ் தந்​தோத்யா உத்​தர​விட்​டுள்​ளார். ரஞ்​சித் சிங் மீது ஒரு பெண் அளித்த புகாரில் ஏற்​கெனவே ஒரு விசா​ரணை நடந்து வரு​கிறது. சமூகம் ஊடகம் மூலம் தொடர்பு கொண்ட பெண் ஒரு​வருக்​கு, தன்னை பார்க்க இந்​தூர் வரும்​படி​யும், அதற்கு விமான டிக்​கெட் ஏற்​பாடு செய்​வ​தாக​வும் கூறி​யுள்​ளார்.

இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ரஞ்​சித் சிங் மீது ஏற்​கெனவே துறை ரீ​தி​யான விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் சாலையில் நடன​மாடி போக்​கு​வரத்து பணி​யில் ஈடு​பட்​டதற்​காக அவர் பதவி​யிறக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார்.