ஷாருக்​கானின் ‘கிங்’ படத்துக்கு ரூ.50 கோடி​யில் ஆக்‌ஷன் காட்சி!

ஷாருக்​கானின் ‘கிங்’ படத்துக்கு ரூ.50 கோடி​யில் ஆக்‌ஷன் காட்சி!

பாலிவுட் சூப்​பர் ஸ்டார் ஷாருக்​கான், ‘ஜவான்’ படத்தை அடுத்து நடித்து வரும் படம், ‘கிங்’. இதில் தீபிகா படு​கோன், சுஹானா கான், அபிஷேக் பச்​சன், அபய் வர்​மா, ராணி முகர்ஜி உள்​ளிட்ட பலர் நடித்து வரு​கின்​றனர். சித்​தார்த் ஆனந்த் இயக்​கு​கிறார்.

இவர்​கள் இரு​வரும் இணைந்த ‘பதான்’ வெற்றி பெற்​ற​தால் இப்​படத்​துக்​கும் எதிர்​பார்ப்பு உள்​ளது. மெகா பட்​ஜெட்​டில் உரு​வாகும் பிரம்​மாண்ட ஆக் ஷ‌ன் படமான இது டிச.24-ம் தேதி வெளி​யாக இருக்​கிறது.

இந்​நிலை​யில், இப்​படத்​தின் ஆக் ஷன் காட்சி படப்​பிடிப்பு ஐரோப்பிய நாடு​களில் ‘லைவ் லோகேஷ’னில் நடந்து வரு​கிறது. இதற்கு மட்​டும் ரூ.50 கோடி செல​வழிக்​கப்​படு​கிறது. அங்கு 10 நாட்​கள் படப்​பிடிப்பு நடக்​கிறது என்​றும் தின​மும் ரூ.5 கோடி செலவு செய்யப்​படு​வ​தாக​வும் படக்​குழு தெரி​வித்​துள்​ளது. இக்​காட்​சிகள் ஷாருக்​கானின் மேற்​பார்​வை​யில் நடந்து வரு​கிறது. இதற்கு அனிருத் இசை அமைக்​கிறார்.