ரூ.49,000 சம்பளம்... எஸ்பிஐ வங்கியில் வேலை... உடனே அப்ளை பண்ணுங்க

ரூ.49,000 சம்பளம்... எஸ்பிஐ வங்கியில் வேலை... உடனே அப்ளை பண்ணுங்க
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் 2026-ஆம் ஆண்டிற்கான சர்க்கிள் பேஸ்டு ஆபீசர் (Circle Based Officer - CBO) பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுமார் 2,273 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ள நிலையில், இதற்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
மொத்த இடங்கள்: 2,273
சென்னை வட்டம் (தமிழ்நாடு & புதுச்சேரி): 165 இடங்கள்
பிற வட்டங்கள்: அகமதாபாத், அமராவதி, பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், டெல்லி போன்ற முக்கிய நகரங்கள்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்: ஏதேனும் ஒரு வணிக வங்கி (Scheduled Commercial Bank) அல்லது மண்டல ஊரக வங்கியில் (RRB) குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அதிகாரியாக (Officer) பணிபுரிந்த அனுபவம் கட்டாயம் இருக்க வேண்டும்.
மொழித் தகுதி: விண்ணப்பிக்கும் வட்டாரத்தின் உள்ளூர் மொழியில் (தமிழ்நாடு எனில் தமிழ்) சரளமாகப் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு (31.12.2025 அன்றுள்ளபடி):
குறைந்தபட்சம்: 21 வயது
அதிகபட்சம்: 30 வயது
தளர்வுகள்: எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எஸ்பிஐ வங்கியின் சிபிஓ பணியிடங்கள் மூன்று நிலைகளில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு: அப்ஜெக்டிவ் வகை (120 மதிப்பெண்கள்) மற்றும் கட்டுரை வரைதல் போன்ற டிஸ்கிரிப்டிவ் வகை (50 மதிப்பெண்கள்) தேர்வுகள் நடைபெறும்.
பரிசீலனை: விண்ணப்பதாரர்களின் அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் தகுதிகள் ஆன்லைன் முறையில் சரிபார்க்கப்படும்.
நேர்காணல்: இறுதி கட்டமாக 50 மதிப்பெண்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஊதிய விபரம்: தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்கு ஆரம்ப கால அடிப்படைச் சம்பளமாக ரூ. 48,480/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் இதர சலுகைகளும் சேர்த்து வழங்கப்படும்.
விண்ணப்பம் தொடங்கிய நாள்: 2026, ஜனவரி 29
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2026, பிப்ரவரி 18
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ளவர்கள் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in/careers என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.