“திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி வள்ளலார் நெடுஞ்சாலை என்று அழைக்கப்படும்.." முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின் அறிவிப்பில், சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி வள்ளலார் நெடுஞ்சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

“திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி வள்ளலார் நெடுஞ்சாலை என்று அழைக்கப்படும்.." முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி "வள்ளலார் நெடுஞ்சாலை" என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்துள்ளார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கருணை வடிவாய் வாழ்ந்த வள்ளலாரின் பிறந்த நாளை 'தனிப்பெரும் கருணை நாள்' என தமிழ்நாடு அரசு பின்பற்றி வருகிறது. கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள அவரது இல்லத்தைப் புனரமைத்தது, ஓராண்டு தொடர் கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழாவை நடத்துவது என பல்வேறு பணிகளை அரசு செய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, வரும் 15ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் 'அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026' நடைபெற உள்ளதாகவும், 'பசிப்பிணி போக்கிய வள்ளலாரின் உயரிய கருத்துக்கள் அயல்நாட்டினரையும் சென்றடைய வேண்டும்' என்பதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை இனி வள்ளலார் நெடுஞ்சாலை என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். வள்ளலார் நெறியாளர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, இந்த பெயர் மாற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.