அமெரிக்க சிவில் மோசடி வழக்கு: நோட்டீஸ் பெற அதானி சம்மதம்

அமெரிக்க சிவில் மோசடி வழக்கு: நோட்டீஸ் பெற அதானி சம்மதம்

இந்​தி​யா​வில் சூரிய மின்​சக்தி ஒப்​பந்​தங்​களை பெறு​வதற்கு அரசு அதி​காரி​களுக்கு அதானி குழு​மம் சுமார் ரூ.2,100 கோடி லஞ்​சம் கொடுத்​த​தாக​வும் ஆனால் அதை மறைத்து அமெரிக்க முதலீட்​டாளர்​களிடம் நிதி திரட்​டிய​தாக​வும் தொழில​திபர் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்​றும் குழும அதி​காரி​கள் மீது அமெரிக்க பங்கு பரிவர்த்​தனை ஆணை​யம் (எஸ்​இசி) குற்​றம் சாட்​டியது.

இது தொடர்​பாக நியூ​யார்க்​கின் ப்ரூக்​ளின் பகு​தி​யில் உள்ள பெடரல் நீதி​மன்​றத்​தில் எஸ்​இசி கடந்த 2024 நவம்​பரில் 2 சிவில் மோசடி வழக்​கு​களை தொடர்ந்​தது. கவுதம் அதானி, சாகர் அதானி ஆகிய இரு​வரும் இந்​தி​யா​வில் இருப்​ப​தால், அவர்​களுக்கு நோட்​டீஸ் வழங்க முடி​யாத நிலை​யில் இவ்​விரண்டு வழக்​கு​களும் ஒரு வருடத்​துக்​கும் மேலாக முடங்​கி​யுள்​ளன.

இந்​நிலை​யில் புரூக்​ளின் பெடரல் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்யப்​பட்ட ஒரு மனு​வில், எஸ்​இசி-​யின் சட்ட ஆவணங்​களை (நோட்​டீஸை) பெற்​றுக்​கொள்ள அதானிகள் இரு​வரும் சம்​மதம் தெரி​வித்​துள்​ள​தாக அவர்​களின் வழக்​கறிஞர்​கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கு அடுத்த கட்​டத்​துக்கு செல்ல இந்த மனுவுக்கு நீதிபதி ஒப்புதல் அளிப்​பது அவசி​ய​மாகும். இந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்​டால் அதானிகள் தங்​கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்​யக் கோரும் மனுவையோ அல்​லது பதிலோ அளிக்க 90 நாள் அவகாசம் பெற​முடி​யும்.

அதன் பிறகு 60 நாட்​களுக்​கும் எஸ்​இசி தனது எதிர்ப்பை தாக்​கல் செய்​ய​லாம். இதற்கு அதானிகள் 45 நாளுக்​குள் தங்​கள் பதில்களை தாக்​கல் செய்ய​லாம். எஸ்​இசி-​யின் குற்றச்சாட்டுகளை அதானி குழு​மம் மறுத்து வரு​வது குறிப்பிடத்தக்​கது.