கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு... எவ்வளவு தெரியுமா?
கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அந்த வகையில், இன்று நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த புதிய விலையின்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்து 1899 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 14 கிலோ எடை கொண்டவீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து 10 ஆவது மாதமாக மாற்றமின்றி 868 ரூபாய் 50 காசுகளாக நீடிக்கிறது.