இன்று வேலையில் வெற்றி நிச்சயம் - உங்கள் ராசிக்கு எப்படி?
மேஷம்: இன்று கவர்ச்சிகரமான பொருட்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கும். அதுதொடர்பான வர்த்தகம் தொடங்க சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. எனினும், சிந்தித்து செயல்படவும்.
ரிஷபம்: உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கக் கூடும். எனினும், உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களுடன் நேரம் செலவழிப்பீர்கள். உங்களுக்கேற்ற விஷயங்களை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் இதுவாகும்.
மிதுனம்: குதூகலம் மற்றும் ஆற்றல் நிறைந்த நாளாக இருக்கும். நேர்மறையான எண்ணங்களால் வெற்றியடைவீர்கள். பிடித்த வேலைகளை செய்வீர்கள். வேலைப்பளு அதிகம் இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்கும்.
கடகம்: இன்று பதற்றமும் எரிச்சலும் இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் கூட, நிதானத்தை இழக்காமல் அமைதியாக செயல்படுங்கள். கோப உணர்வு இருந்தால், பிரச்சினைகளைத் தீர்ப்பது கடினமாகும்.
சிம்மம்: தன்னம்பிக்கை உணர்வு இன்று அதிகம் இருக்கும். பணியிடத்தில் வேலை தொடர்பான முடிவுகளை திறம்பட எடுப்பீர்கள். வேலையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் சமாளித்து வெற்றியடைவீர்கள்.
கன்னி: இன்று நீங்கள் விடுப்பு எடுத்து, உங்களை குறித்து நீங்களே ஆராய வேண்டும். பணியிடத்தில் சில கசப்பான உணர்வுகள் ஏற்படக்கூடும். எனவே எச்சரிக்கையாக இருக்கவும். புதிய காதல் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
விருச்சிகம்: இன்று நீங்கள் வேலையில் மூழ்கிப் போவீர்கள். பொறுப்புக்களும் கடமைகளும் அதிகம் இருக்கும். எனினும் மாலையில் நண்பர்களுடன் குதூகலமாக நேரத்தை செலவழித்து, மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
தனுசு: இன்று, சிந்தித்து செயல்படுவது நல்லது. காதல் உணர்வு காரணமாக நீங்கள் இளமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வீர்கள். ஆனால், உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் எச்சரிக்கையுடன் செயல்படவும்.
மகரம்: வேலைப்பளுவால் மிகவும் சோர்வாக உணர்வீர்கள். வர்த்தக துறையைப் பொருத்தவரை போட்டி அதிகம் இருக்கும். போட்டியாளர்கள் உங்கள் வர்த்தகத்தை கெடுக்க நினைத்தாலும் அது உங்களை பாதிக்காது.
கும்பம்: இன்று மாணவர்கள் மிகவும் சிறந்து விளங்குவார்கள். நூற்றுக்கணக்கானோருக்கு ஊக்கம் அளிப்பவராக இருப்பீர்கள். எனினும், அதற்காக கர்வம் கொள்ளாமல் பணிவுடன் இருக்க வேண்டும்.
மீனம்: பணியிலும் வர்த்தகத்திலும் புதிய விஷயங்களை இன்று அறிமுகப்படுத்துவீர்கள். கடவுளின் ஆசையின் காரணமாக உங்களது வெற்றி நிச்சயம். ஆனால் ஏமாற்றம் அடையாமல், நீங்கள் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும்.