BREAKING: இந்திய அணிக்கு 214 ரன்கள் இலக்கு
2வது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்க அணி 214 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியா-தெ.ஆப்பிரிக்கா அணிகள் இடையே 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் கட்டாக்கில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்களுக்கும் மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி நியூ சண்டிகரில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி வீரர் டி ஹாக் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். இதேபோல், மறுமுனையில் விளையாடிய தெ.ஆப்பிரிக்க அணி வீரர்களும் கட்டு கோப்பாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடிய டி ஹாக் 46 பந்துகளில் 90 ரன்கள் (7 சிக்சர்கள், 5 பவுண்டரிகள்) விளாசிய நிலையில், ரன் அவுட்டானார். 10 ரன்களில் டி20 கிரிக்கெட் சதத்தை அவர் கோட்டை விட்டார்.
சீராக விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து, 213 ரன்களை எடுத்தது.

இதன்மூலம் இந்திய அணிக்கு, தென்னாப்பிரிக்க அணி 214 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.