பிரபல ஹாலிவுட் நடிகை கேத்தரின் ஓ’ஹாரா காலமானார்
பிரபல ஹாலிவுட் நகைச்சுவை நடிகை கேத்தரின் ஓ’ஹாரா (71) உடல் நலக்குறைவால் காலமானார்.
நகைச்சுவை படங்களான ஆஃப்டர் ஹவர்ஸ் (1985), ஹார்ட் பர்ன் (1986), பீட்டில்ஜூஸ் (1988), ஹோம் அலோன் (1990), ஹோம் அலோன் 2 (1992), வெயிட்டிங் ஃபார் கஃப்மன் (1996) உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ‘ஹோம் அலோன்’ படத்தில் இவர் நடித்த அம்மா கதாபாத்திரம் பாராட்டப்பட்டது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் கணவர் போ வெல்ச், மகன்கள் மேத்யூ வெல்ச் (32), லூக் வெல்ச் (28) ஆகியோருடன் வசித்து வந்த அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜன.30 அன்று காலமானார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.