மல்லாங்கிணறு அரசு சுகாதார நல நிலையத்தின் இரண்டு கட்டிடங்கள் ONGC - CSR ஆதரவுடன் புதுப்பிக்கப்பட்டன
மல்லாங்கிணறு அரசு சுகாதார நல நிலையத்தின் OP வார்டு கட்டிடம் மற்றும் பிரசவ வார்டு கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் இருந்தன. 2024 நவம்பர் மழையின்போது, மொட்டை மாடி மற்றும் சுவர்களில் கடுமையான நீர் கசிவும் சேதங்களும் ஏற்பட்டிருந்தன. அவை உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டிய நிலை இருந்தது.
ONGC நிறுவனம் தனது CSR நன்கொடை மூலம் உதவியதால் இந்த இரண்டு கட்டிடங்களும் தற்போது புதுப்பிக்கப் பட்டுள்ளன. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மரு. சுகபுத்ரா IAS அவர்களின் ஆதரவுடனும், ONGC நிதி உதவியுடனும், அன்பாலயா அறக்கட்டளை இந்த புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டது. புதுப்பிக்கப்பட்ட இரண்டு கட்டிடங்களும் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி திறந்து வைக்கப் பட்டன.
மல்லாங்கிணற்றின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடங்கள் பிப்ரவரி 20, 2026 அன்று முறையாகத் திறக்கப்பட்டன.

ONGC இன் மேற்பார்வை பொறியாளர் திரு. சந்தோஷ் குமார்,GC இன் தலைமை மேலாளர் (HR) திரு. ரஞ்சித் விராலி முருகேசன் ஆகியோர் புதுப்பிக்கப்பட்ட 2 கட்டிடங்களையும் திறந்து வைத்தனர். மல்லாங்கிணறு பிளாக் மருத்துவ அதிகாரி திரு. T. ராஜேஷ் கண்ணன் MBBS தொடக்க நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.அன்பாலயா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திருமதி. சர்மிளா மற்றும் அறங்காவலர் திரு. திருஞானம் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர். புதுப்பிக்கப்பட்ட கட்டிடங்கள், திறப்பு விழா நாளிலிருந்தே பொது பயன்பாட்டிற்கு வந்தன.