காங்கோ சுரங்க விபத்தில் 200 பேர் உயிரிழப்பு

காங்கோ சுரங்க விபத்தில் 200 பேர் உயிரிழப்பு

காங்கோ நாட்​டில் ஏற்​பட்ட சுரங்க விபத்​தில் 200-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். பலர் காயமடைந்​துள்​ளனர். ஏராள​மானோரை காண​வில்​லை.

ஆப்​பிரிக்க கண்​டத்​தின் மத்​திய பகு​தி​யில் உள்ள காங்கோ நாட்டில் சுமார் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக உள்​நாட்​டுப் போர் நீடித்து வரு​கிறது. சுமார் 120-க்​கும் மேற்​பட்ட கிளர்ச்​சிக் குழுக்​கள் காங்​கோ​வின் பல்​வேறு பகு​தி​களை தங்​கள் கட்​டுப்​பாட்​டின் கீழ் வைத்​துள்​ளன. 

இது செல்​போன், கணினி, விமான பாகங்​கள் தயாரிக்க பயன்​படுத்​தப்​படு​கிறது. ரூபையா சுரங்​கத்​தில் சுமார் 4,000 தொழிலா​ளர்​கள் பணி​யாற்றி வந்​தனர். சில நாட்​களுக்கு முன்பு சுரங்​கத்​தில் மண் சரிவு ஏற்​பட்​டது. இதில் இது​வரை 200-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​துள்​ளனர். பலர் காயமடைந்​துள்​ளனர். ஏராள​மானோரை காண​வில்​லை. அவர்​கள் சுரங்​கத்​துக்​குள் சிக்கி உயி​ரிழந்​திருக்​கக்​கூடும் என்று அஞ்​சப்​படு​கிறது.