‘வேள்​பாரி’​யில் விக்​ரம், ரன்​வீர் சிங்?

‘வேள்​பாரி’​யில் விக்​ரம், ரன்​வீர் சிங்?

ஷங்​கர் இயக்​கத்​தில் வெளி​யான ‘இந்​தி​யன் 2’ படத்​தில் கமல்​ஹாசன், சித்​தார்த், பிரியா பவானி சங்​கர், ரகுல் ப்ரீத் சிங் உள்பட பலர் நடித்​திருந்​தனர்.

இந்​தப் படம் எதிர்​பார்த்த வெற்​றியை பெற​வில்​லை. இதையடுத்து அவர் இயக்​கத்​தில் ராம் சரண், கியாரா அத்வானி நடித்து வெளியான ‘கேம் சேஞ்​சர்’ படமும் வெற்றி பெற​வில்​லை. இந்​நிலை​யில் ‘இந்​தி​யன் 3’ படத்​தின் 70 சதவி​கித காட்​சிகள் முடிவடைந்​து​விட்ட நிலை​யில் அதன் படப்​பிடிப்பு தொடர​வில்​லை.

இதற்கிடையே, சு.வெங்​கடேசன் எழு​திய ‘வேள்பாரி’ நாவலின் உரிமையை வாங்​கி​உள்ள ஷங்​கர், அதற்​கான திரைக்​கதையை ஏற்​கெனவே எழுதி வைத்​துள்​ளார். இப்​படத்தை 3 பாக​மாக இயக்க இருப்​ப​தாக தெரி​வித்​திருந்​தார். இப்​போது அதற்​கான வேலைகளை ஷங்​கர் தொடங்கி இருக்​கிறார்.

மும்​பையை சேர்ந்த பென் மீடியா நிறு​வனம் இப்​படத்​தைத் தயாரிக்க இருப்​ப​தாகக் கூறப்​படுகிறது. இந்​நிலை​யில் இப்​படத்​தில் விக்​ரம், ரன்​வீர் சிங் இரு​வரும் நடிக்க இருப்​ப​தாகத் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

‘அந்​நியன்’ படத்​தின் இந்தி ரீமேக்​கில் ரன்​வீர் சிங் நடிக்க இருந்​தார். அந்​தப் படம் தொடங்​கப்​பட​வில்​லை. இதற்​கிடையே அவர் இதில் நடிக்க அதிக வாய்ப்​பிருப்​ப​தாகக் கூறப்​படுகிறது.