‘திரைத்​துறை​யில் 8 மணி நேர வேலை’ - என்ன சொல்​கிறார் சவுரப் சுக்​லா?

‘திரைத்​துறை​யில் 8 மணி நேர வேலை’ - என்ன சொல்​கிறார் சவுரப் சுக்​லா?

இந்தி நடிகரும் இயக்​குநரு​மான சவுரப் சுக்​லா, கமலின் ‘ஹே​ராம்’ படம் முலம் தமிழ் சினி​மாவுக்கு வந்​தார். அந்​நியன், தில்​லுக்​குத் துட்டு ஆகிய படங்​களில் நடித்​துள்​ளார். இவர் ‘பிண்​டியா கே பாகுபலி 2’ என்ற வெப் தொடரில் நடித்​துள்​ளார்.

அமேசன் பிரைமில் வெளி​யாகி​யுள்ள இத்​தொடரின் புரமோஷனில் கலந்து கொண்ட அவரிடம் திரைத்​துறை​யில் 8 மணி நேர வேலை பற்​றிய விவாதம் அதி​கரித்து வரு​வது பற்றி கேட்​கப்​பட்​டது. அதற்​குப் பதிலளித்த அவர், “ஒரு வேலை​யில் நீங்​கள் முழு​மை​யாக மூழ்கி இருக்​கும்​போது, அரை மணி நேரம், ஒரு மணி நேரம் கூடு​தலாகச் சென்​றாலும் அதைப் பற்றி நினைக்க வேண்​டாம். அந்த தொடர்ச்​சி​யான சிந்​தனை ஓட்​டத்​தில்​தான் மிகச் சிறந்த படைப்​பு​கள் உரு​வாகின்​றன.

நேர வரம்பு இருக்​கலாம். ஆனால் கடி​காரத்​தைப் பார்த்​துக் கொண்​டே, ‘இது வீட்​டுக்​குப் போகும் நேரம்’ என்று நினைப்​பதை விட, நீங்​கள் உரு​வாக்​கும் படைப்​பின் தரமே முக்​கி​யம். இசைத்​துறை​யில் இன்று படைப்​பாளி​களை விட படைப்பாற்​றல் இல்​லாதவர்​கள் அதிக அதி​காரம் பெற்​றுள்​ள​தாக ஏ.ஆர்​.ரஹ்​மான் கூறியது பற்றி கேட்​கிறார்​கள்.

இந்த விஷ​யத்​தைத் தனிப்​பட்ட முறை​யில் அணுக விரும்​ப​வில்​லை. 3 வகை​யான உரை​யாடல்​கள் இருப்​ப​தாகக் கேள்​விப்​பட்​டிருக்​கிறேன். ஒன்​று, மனிதர்​களைப் பற்​றிப் பேசுவது. மற்​றொன்​று, நிகழ்​வு​களைப் பற்​றிப் பேசுவது, இன்​னொன்​று, கருத்​துகளைப் பற்​றிப் பேசுவது. நான் 3-வது வழியைத் தேர்ந்​தெடுப்​பேன். மனிதர்களைப் பற்​றிப் பேசாமல், கருத்​துகளைப் பேசலாம்” என்றார்.