BREAKING: இசான் கிஷன் மரண அடி... 5வது டி20 போட்டியில் வென்றது இந்திய அணி

BREAKING: இசான் கிஷன் மரண அடி... 5வது டி20 போட்டியில் வென்றது இந்திய அணி

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டி20 போட்டித் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

திருவனந்தபுரத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் சாம்சன் 6 ரன்னிலும், அபிசேக் சர்மா 30 ரன்னிலும் அவுட்டாகி வெளியேறினர். எனினும் இசான் கிஷன்  அதிரடியாக விளையாடி முதல் சதத்தை பதிவு செய்தார். எனினும் அவர் 103 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். 

Ishan Kishan celebrates his maiden T20I hundred, India vs New Zealand, 5th T20I, Thiruvananthapuram, January 31, 2026

சூரியகுமார் யாதவ் 63, ஹர்திக் பாண்டியா 42 ரன்கள் அதிரடியாக குவிக்க இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களை சேர்த்தது.

இதையடுத்து 272 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணி, 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. நியூசிலாந்து வீரர் பின் ஆலன் அதிகபட்சமாக 80 ரன்களை விளாசினார்.

Finn Allen was quick off the blocks, India vs New Zealand, 5th T20I, Thiruvananthapuram, January 31, 2026

இந்திய அணி தரப்பில் அர்ஸ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Arshdeep Singh celebrates a wicket, India vs New Zealand, 5th T20I, Thiruvananthapuram, January 31, 2026

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.