ஜி.வி.பிரகாஷூக்கு டேக் செய்த பதிவு... அடுத்து நடந்த அதிர்ச்சி.. பகீர் பின்னணி என்ன?

ஜி.வி.பிரகாஷூக்கு டேக் செய்த பதிவு... அடுத்து நடந்த அதிர்ச்சி.. பகீர் பின்னணி என்ன?

உதவி செய்ய கோரி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு வந்த பதிவை நம்பி அவர் உதவி செய்துள்ளார்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.பி.பிரகாஷிடம் அம்மா இறந்து விட்டதாக கூறி எக்ஸ் தளத்தில்  பதிவிட்டு பணமோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இணைய மோசடியில் இசையமைப்பாளர் ஏமாற்றப்பட்டது எப்படி?

தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வெற்றிகரமாக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ்குமார். நடிப்பு, இசை என இரு பிரிவிலும் வெற்றிவாகை சூடி வரும் ஜி.வி.பிரகாஷ் யாரேனும் உதவி என்று கேட்டால் உடனடியாக தன்னால் முடிந்த பண உதவி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இப்போது அம்மாவும் இறந்து விட்டார். இறுதி சடங்கு நடத்துவதற்கு கூட பண வசதி இல்லை. இதனால் நானும் தங்கையும் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறோம். அம்மாவிற்கு இறுதி சடங்கு பண்ணுவதற்கு உதவி பண்ணுங்கள் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து மனம் உருகிப் போன ஜி.பி. பிரகாஷ் அந்த பதிவை அனுப்பியவரின் செல்போன் நம்பரைவாங்கி, அவரது வங்கிக் கணக்கிற்கு 20 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பி வைத்திருக்கிறார்.

மேலும் தான் செய்த பண உதவியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதை பார்த்து பலரும் அந்த கணக்கிற்கு பணம் அனுப்பி வைத்தனர். ஆனால் அதன் பிறகு நிகழ்ந்த சம்பவங்கள் தான் இதில் ட்விஸ்டை ஏற்படுத்தியிருக்கிறது. தனது அம்மா இறந்து விட்டதாக சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோ பதிவு 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமூக வலைதளத்தில் உலவி வந்திருக்கிறது.

இந்த வீடியோ ஏற்கெனவே யூடியூப்பில் உலவி வருவதாகவும், அதை ஜி.வி.பிரகாஷுக்கு பார்வேர்டு செய்து யாரோ நன்கு ஏமாற்றியிருக்கிறார்கள் என்றும் சோசியல் மீடியாவில் ஆதாரத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற மோசடி நபர்கள் இருப்பதால் உதவும் குணம் படைத்த பலரும் பின்வாங்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இதனால், உண்மையில் உதவி கேட்பவர்களுக்கும் சிக்கல் ஏற்படுகிறது.